சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க
நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.
கழிவறைக்கு செல்ல வசதியாக நாட்காலி ஒன்றை வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டமையே இதற்கு காரணம் என சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சில காலமாக முட்டுக்காலில் இருந்து வரும் உபாதை காரணமாக, சாதாரண கழிவறைக்கு செல்வதில் ரஞ்சன் சிரமப்பட்டு வருவதால், நாற்காலி ஒன்றை வழங்குமாறு கோரியுள்ளார்.
அவரது கோரிக்கைக்கு அதிகாரிகள் பதிலளிக்காத காரணத்தினால், அவர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.