சிறையிலிருந்த போதிலும் ரஞ்சன் மனச்சாட்சிக்கு துரோகம் இழைக்கவில்லை! - சஜித் தெரிவிப்பு
ரஞ்சன் ராமநாயக்க ஒருபோதும் யாருக்கும் தனது மனச்சாட்சியைக் காட்டிக்கொடுக்காத உண்மையுள்ள மக்கள் பிரதிநிதி எனவும், சிறைவாசம் அனுபவித்த போதிலும் அவர் தனது சுயமரியாதையைக் காப்பாற்றினார் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
ரஞ்சன் ஒருமுறை கூறியது போல், "அவர்கள் அனைவரும் நண்பர்கள் தம்பி” என்ற கூற்று இந்நேரத்தில் மீண்டும் நினைவுக்கு வருவதாகக் கூறிய எதிர்க்கட்சித் தலைவர், ரஞ்சன் அவர்களின் நண்பன் இல்லாததால் இன்னும் சிறையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் இன்று பிற்பகல் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவைப் பார்வையிடச் சென்ற போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானும் கலந்துகொண்டுள்ளார்.
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
Bigg Boss: இது உங்க வீடு இல்லை... நீங்க கெஸ்ட் இல்லை! நண்பன் மனைவியிடம் சீறி பாய்ந்த விஜய் சேதுபதி Manithan