விசேட கழிப்பறை வசதி கோரும் ரஞ்சன் ராமநாயக்க!
சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, சிறையில் உள்ள சாதாரண கழிப்பறைகளை தன்னால் பயன்படுத்த முடியாது என்று கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலீப் வெதராச்சி இதனை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சிறப்பு வகை கழிப்பறை வசதி வழங்குமாறு பல சந்தர்ப்பங்களில் ரஞ்சன் ராமநாயக்கவினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் திலீப் வெதராச்சி தெரிவித்துள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்க பலமுறை கோரிக்கை விடுத்த போதிலும் இந்த வசதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. ரஞ்சன் ராமநாயக்க முழங்கால் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், இதனால் சாதாரண கழிப்பறையைப் பயன்படுத்த முடியவில்லை எனவும் திலீப் வெதராச்சி கூறியுள்ளார்
.
இதேவேளை, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.