ரஞ்சன் ராமநாயக்க கொழும்பு தேசிய வைத்தியசாலையில்
முட்டுக்காலில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க (Rajan Ramanayake) கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க (Chandana Ekkanayake) தெரிவித்துள்ளார்.
அங்குகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஞ்சன், இந்த உபாதை காரணமாக நேற்றைய தினம் மாலை காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அங்கிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
மருத்துவர்களின் ஆலோசனைக்கு அமைய ரஞ்சனுக்கு இன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் எலும்பியல் சிகிச்சைப் பிரிவில் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 16 ஆம் திகதி மீண்டும் இந்த பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
இதன் காரணமாக அவர் வெலிகடை சிறைச்சாலையின் மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam