ஜனாதிபதி அனைத்து கட்சிகளிடமும் விடுத்துள்ள கோரிக்கை
அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பொருளாதார மாற்ற சட்டத்திற்கு அனைத்து கட்சிகளும், ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்…,
ஐக்கிய தேசியக்கட்சியின் கொள்கை
“பழைய காலத்து தொலைபேசிகளில் தற்போது பயனில்லை, சுழற்றும் காலம் முடிந்துள்ளது. தற்பொழுது அழுத்தும் காலம் உருவாகியுள்ளது. கோட்டாபாய சஜித்திடம் பிரதமர் பதவியை ஏற்குமாறு கோரினார். என்ன செய்தார்?
ஜனாதிபதி பிரேமதாச, ஜே.ஆர்.ஜயவர்தனவாக இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்கள்? இந்த சந்தர்ப்பத்தை கைவிட்டிருப்பார்களா, அதுவே ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கையாகும். தீர்வுத் திட்டம் இன்றி ஜே.வி.பி தப்பியோடியது.
என்னிடம் தீர்வு இருந்த காரணத்தினால் நான் சவாலை ஏற்றுக்கொண்டேன். புத்தாண்டு எப்படி? வெசாக் எப்படி?
பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறை : புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு
பொருளாதார மாற்றம் குறித்த சட்டமூலம்
எந்தவொரு கட்சியும் தீர்வுத் திட்டங்களை முன்வைக்கவில்லை, எந்த கட்சியிடமும் தீர்வுத் திட்டம் இல்லை. நாட்டை மீட்டெடுக்க ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாடு குறித்த யோசனைகள் நாடாளுமன்றில் முன்வைக்கப்படும்.
பொருளாதார மாற்றம் குறித்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சிலர் கூறுவது போன்று சர்வதேச நாணய நிதியத்துடன் கடைக்குச்சென்று கடன் கேட்பது போன்று செய்ய முடியாது.
அனைவரும் பொருளாதார மாற்றச் சட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு கோருகின்றேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |