ஜூலை மாதம் ரணில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பார்?
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஜூலை மாதம் பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்க கட்சியின் உத்தியோகபூர்வ மட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
தற்போதைய நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கவை விட பொருத்தமானவர் யாரும் இல்லை என்று கட்சி மூத்தவர்கள் ஒருமனதாக முடிவுசெய்துள்ளனர்.
கடந்த பொது தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி படு தோல்வியை சந்தித்திருந்த நிலையில், ஒரேயொரு தேசியப் பட்டியல் ஆசனம் மட்டும் கிடைத்திருந்தது.
இந்நிலையிலேயே, ரணில் விக்கிரமசிங்க தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஜூலை மாதம் பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri