ஜனாதிபதித் தேர்தலில் ரணில் போட்டியிடமாட்டார்: கம்மன்பில உறுதி
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடமாட்டார் என்பது உறுதி என்று பிவிருது ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் குறிப்பிட்டதாவது, படுதோல்வியைத் தவிர்ப்பதற்காகவே முன்கூட்டியே நாடாளுமன்றத் தேர்தலை நடத்துமாறு பசில் ராஜபக்ச கோருகின்றார். ஆனால், எந்தத் தேர்தல் நடந்தாலும் மொட்டுக் கட்சியால் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாது.
நாடாளுமன்றத் தேர்தல்
மொட்டுக் கட்சிக்கு ஆதரவு உள்ளது, மக்கள் உள்ளனர் என்றெல்லாம் அக்கட்சியினர் மாயையை உருவாக்கி வருகின்றனர். ஜனாதிபதித் தேர்தலில் படுதோல்வி ஏற்படும் என்பது பசிலுக்குத் தெரியும்.
எனவே, ஜனாதிபதித் தேர்தல் முதலில் நடத்தப்பட்டால் நாடாளுமன்றத் தேர்தலுக்கு வேலை செய்வதற்கு எவரும் இருக்கமாட்டார்கள். அதனால் மொட்டுத் தரப்பினருக்கு மேலும் பின்னடைவு ஏற்படும்.
இதனாலேயே நாடாளுமன்றத்தில் சில ஆசனங்களைத் தக்கவைத்துக்கொள்ள முன்கூட்டியே நாடாளுமன்றத் தேர்தல் கோரப்பட்டுள்ளது. இரண்டாவது அரச ஊடகம் மற்றும் அரச அதிகாரிகள், பொலிஸார் ஊடாக ஏதேனும் ஒத்துழைப்பைப் பெறலாம் என பசில் கருதுகின்றார்.
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டால் இந்த ஒத்துழைப்பும் கிடைக்கப்பெற மாட்டாது.அதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடமாட்டார் என்பது உறுதி என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam
