சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் நாளை தீர்க்கமான முடிவு
புதிய இணைப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாளை நடைபெறவுள்ள ஆளும் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் சர்வகட்சி அரசு தொடர்பில் தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் என்று நம்புகின்றோம் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், “ஆளும் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நாளை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.
சர்வகட்சி அரசாங்த்திற்கு தீர்க்கமான முடிவு
இதன்போது சர்வகட்சி அரசு தொடர்பில் தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் என்று நம்புகின்றோம்.
இதேவேளை, புதிய அமைச்சரவையில் அமைச்சுப் பதவிகளைப் பகிர்ந்துகொள்வது குறித்தும் ஆராயப்படவுள்ளது.
நாட்டின் பொருளாதார நெருக்கடி தற்போது எந்தக் கட்டத்தில் உள்ளது என்பது
தொடர்பில், நிதி அமைச்சரான ஜனாதிபதி விளக்கமளிக்கவுள்ளார்” என தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
ஆளும் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நாளை(29) நடைபெறவுள்ளது.
இந்தச் சந்திப்பு நாளை மாலை 5 மணியளவில் நடைபெறவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது.