காலில் சங்கிலியை கட்டி அடைத்து வைத்திருந்தனர்! முன்னாள் போராளி எக்னலிகொட வழக்கில் தெரிவித்த திடுக்கிடும் தகவல்கள்...

Sri Lanka Army Gotabaya Rajapaksa Sri Lanka Final War Prageeth Eknaligoda
By Kanthan Oct 03, 2026 12:41 PM GMT
Report

பிரகீத் எக்னலிகொட (Prageeth Eknaligoda) கடத்தல் சம்பவத்தில் இராணுவப் புலனாய்வு பிரிவினர் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்களுக்கு மனித குலத்திற்கு ஒப்பில்லாத பல சித்திரவதைகளை கொடுத்து கடத்தலுக்கு தங்களை பயன்படுத்தியதாக முரளி என்ற முன்னாள் போராளி (சுமதிபால சுரேஷ் குமார்) ஹோமாகம நீதிமன்றத்தில் நடைபெற்ற பிரகீத் எக்னொலிகொட கடத்தல் வழக்கில் சாட்சியமளிக்கையில் தெரிவித்திருந்தார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இறுதிப் போரில் சரணடைந்த பின்னர் கிரித்தலை 3 ஆவது ஆயுதமேந்திய புலனாய்வுப் படைப்பிரிவின் பெரிய முகாம், ஆனால் எம்மை அதன் பின்புறமிருந்த காட்டுப் பகுதியிலேயே தடுத்து வைத்திருந்தனர்.

நான் உள்ளிட்ட போராளி உறுப்பினர்கள் அனைவரது கால்களிலும் விலங்கிடப்பட்டு தரையில் பொருத்தப்பட்டிருந்த இரும்புக் கம்பியில் இணைக்கப்பட்டு தகரக் கொட்டகையில் அடைத்து வைத்திருந்தனர்.

மகிந்த குடும்பத்திற்கு தொடரும் ஆபத்து! மற்றுமொரு மோசடியில் நாமல் - யோசித

மகிந்த குடும்பத்திற்கு தொடரும் ஆபத்து! மற்றுமொரு மோசடியில் நாமல் - யோசித

தொலைபேசி உரையாடல்கள்

அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த போது இராணுவப் புலனாய்வு அதிகாரிகள், தகரக் கொட்டகையிலிருந்து மற்றொரு இடத்திற்கு அழைத்துச் சென்று, நாதன் மற்றும் ரசிக ஆகிய இரு புலனாய்வு அதிகாரிகள் தொலைபேசியொன்றை எடுத்துவந்து, ஏதோவொரு இலக்கத்தை தொடர்பு கொண்டு, லவுட்ஸ்பீக்கரில் (Loudspeaker) போட்டுப் அவர்கள் கூறுவதை பேசுமாறு சொல்லுவார்கள் நான் மட்டுமன்றி ஏனைய போராளி உறுப்பினர்களுக்கும் இவ்வாறு செய்யுமாறு பணித்துள்ளனர்.

அவ்வாறு பேச வைத்த சந்தர்ப்பமொன்றில் தான், ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் தொலைபேசி இலக்கத்திற்கும் அழைப்பு மேற்கொண்டு பேசுமாறு கூறினார்கள்.

காலில் சங்கிலியை கட்டி அடைத்து வைத்திருந்தனர்! முன்னாள் போராளி எக்னலிகொட வழக்கில் தெரிவித்த திடுக்கிடும் தகவல்கள்... | Ekneligoda Case

இதற்கிணங்க, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவுடன் முரளி ஆகியோர் பலமுறை பேசியுள்ளனர்.

அவ்வாறு பேசும்போது, முரளி தமிழீழ விடுதலைப புலிகள் அமைப்பிலிருந்து தப்பித்து வந்துள்ளதாகவும், இலங்கைப் பாதுகாப்புப் படையினரிடம் சிக்காமல் தலைமறைவாக இருப்பதாகவும் எக்னெலிகொடவிடம் கூறியுள்ளார்.

தலைமறைவாக இருக்கும் காலத்தில் வாழ்வாதாரத்திற்குத் தனது தம்பி ஒருவரே உதவுவதாகவும் தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்து இருக்க முடியாது என்பதால், வெளிநாடு செல்வதற்கு கடவுச்சீட்டு (Passport) தயாரிக்க வேண்டும் என முரளி கூறியதும், "நாம் நேரில் சந்தித்துப் பேசுவோம்" என பிரகீத் எக்னெலிகொட தெரிவித்துள்ளார்.

இராணுவப் புலனாய்வு அதிகாரிகளும் நேரில் சந்திக்குமாறு கூறியதால், சந்திப்பிற்கு உடன்பட்டுள்ளனர். சந்திப்பிற்கான இடத்தை பிரகீத் எக்னெலிகொடவே தீர்மானித்துள்ளார்.

ஹபரண பகுதியில் அவருக்குச் சொந்தமான விவசாயக் காணியொன்று இருந்துள்ளது. அங்கு வருமாறு அவர் கூறியுள்ளார்.

அதன்படி முரளி, நாதன் மற்றும் ரஞ்சி (இவர் தனியாகத் திரிவீலில் வந்துள்ளார்) ஆகியோருடன் பிரபோத் சிறிவர்தன எனும் அதிகாரி வேனை ஓட்டிச் சென்றுள்ளார்.

வேனில் மேலும் இருவர் இருந்தபோதிலும் அவர்களின் பெயர்கள் நினைவில் இல்லை என முரளி கூறியுள்ளார். கிரித்தலை வீதியில் வேனை நிறுத்தி முரளியையும் நாதனையும் இறக்கிவிட்டுள்ளனர்.

பின்னர் ரஞ்சியின் திரிவீலில் இருவரும் ஏறிக் கொண்டு பிரகீத் எக்னெலிகொடவைச் சந்திக்கச் சென்றுள்ளனர். அதற்குள் பிரகீத் ஹபரண நகரத்திற்கு வந்திருந்தார். ஆனால் வருவது இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் என்பது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.

ஏனெனில் ரஞ்சி திரிவீல் ஓட்டுநராகவும், நாதன் - தொலைபேசியில் உதவி செய்வதாகக் கூறப்பட்ட 'தம்பி'யாகவும் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தனர்.

பின்னர் பிரகீத் எக்னெலிகொடவையும் திரிவீலில் ஏற்றிக்கொண்டு ஹபரண நகருக்கு சற்றுத் தொலைவிலுள்ள விவசாயக் காணிக்குச் சென்றுள்ளனர்.

பிரகீத் எக்னலிகொடவை சந்தித்தபோது

பின்னர் நால்வரும் திரிவீலில் ஹபரண நகரத்திற்கு வந்து, பிரகீத் எக்னெலிகொடவை அங்கு இறக்கிவிட்ட பின்னர் அவர்கள் முகாமிற்கு சென்றுள்ளனர்.

அன்றைய தினத்திற்குப் பிறகு தாம் பிரகீத் எக்னெலிகொடவை மீண்டும் சந்திக்கவே இல்லை என முரளி தெரிவித்துள்ளார். அந்த சந்திப்பிற்குப் பிறகு, முகாம் பிரதானியான கர்னல் சம்மி குமாரரத்ன முரளியை தனது அலுவலகத்திற்கு வரவழைத்து, மீண்டும் பிரகீத்திற்கு அழைப்பெடுத்து, "கடவுச்சீட்டு தயாரிக்கும் வேலையை விரைவுபடுத்த வேண்டும், அதற்குரிய ஆவணங்களை அனுப்புமாறு கேள்" எனக் கூறியுள்ளார்.

அதன்படியே தொலைபேசியை லவுட் ஸ்பீக்கரில் போட்டு முரளி பேசியுள்ளார்.

காலில் சங்கிலியை கட்டி அடைத்து வைத்திருந்தனர்! முன்னாள் போராளி எக்னலிகொட வழக்கில் தெரிவித்த திடுக்கிடும் தகவல்கள்... | Ekneligoda Case

பிரகீத்தும் ஆவணங்களை அனுப்புமாறு கூறவே, "அன்று சந்தித்த தம்பி நாதனிடம் ஆவணங்களைக் கொடுத்து அனுப்புகிறேன்" என முரளி கூறியுள்ளார்.

ஆவணங்கள் அனுப்பப்பட்ட பின்னர், "ஆவணங்கள் கிடைத்துவிட்டன" என பிரகீத் மீண்டும் முரளிக்கு அழைப்பெடுத்துக் கூறியுள்ளார்.

அதன் பின்னர், இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் பிரகீத்திற்கு அழைப்பெடுக்க முரளிக்குச் சந்தர்ப்பம் அளிக்கவில்லை. பின்னரே, பத்திரிகையொன்றைச் சுற்றியிருந்த தாளில் வந்த செய்தியைப் பார்த்து, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார் என்பதை முரளி அறிந்து கொண்டுள்ளார்.

அதனைக் கேட்டதும் தாம் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக முரளி சாட்சியமளித்துள்ளார்.

பிரகீத் - முரளிக்கிடையிலான தொடர்பு

பிரகீத் எக்னொலிகொடவை முரளி எவ்வாறு பழக்கமாக்கி கொண்டார் என நீதிமன்றத்தில் தெரிவித்த தகவல்கள் முரளி முல்லைத்தீவு பகுதியில் பணியாற்றிய காலத்தில்,செல்வம் அடைக்கலநாதன் எம்.பியுடன் தொடர்பு இருந்துள்ளது.

அவருடன் முரளி மடுப் தேவாலயத்திற்குச் சென்றுள்ளார். மன்னார் மடுமாதா தேவாலயத்தில்தான் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை முதன்முறையாகச் சந்திக்கிறார்.

சுனாமிகளுக்குப் பின்னர், 2005 காலப்பகுதியில் மூதூர் பகுதிக்கு வந்த எக்னெலிகொட, அங்கிருந்து பல கட்டுரைகளுக்கான விவரங்களைச் சேகரித்துச் சென்றுள்ளார்.

காலில் சங்கிலியை கட்டி அடைத்து வைத்திருந்தனர்! முன்னாள் போராளி எக்னலிகொட வழக்கில் தெரிவித்த திடுக்கிடும் தகவல்கள்... | Ekneligoda Case

அக்காலகட்டத்தில் முரளி தான் உதவி செய்துள்ளார். மடுமாதா தேவாலயத்தில் சந்தித்தபோதே பிரகீத் எக்னெலிகொடவின் தொலைபேசி இலக்கத்தைப் பெற்றுக்கொண்டு தொலைபேசிக் குறிப்பேட்டில் பதிந்து வைத்துள்ளார்.

முரளி இராணுவத்தில் சரணடைந்தபோது, அந்தத் தொலைபேசிக் குறிப்பேட்டை வைத்தே தகவல்கள் எடுக்கப்பட்டதாக சாட்சியமளித்தபோது கூறினார். ஏனெனில், தாம் கைது செய்யப்படுவதற்கு முன்னரே பிரகீத்துடன் தொலைபேசியில் பேசியுள்ளதாகவும், அவரை ஒரு சுயாதீன ஊடகவியலாளராகவே அறிந்து வைத்திருந்ததாகவும் முரளி நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

வழக்கு விசாரணை நவம்பர் 26 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில், இந்த முக்கிய சாட்சியான சுரேஷ் குமார் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டார். இதில் ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவரும் சம்பந்தப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆபத்தான நபர்களான கெஹெல்பத்தர மற்றும் செவ்வந்தி தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கை

ஆபத்தான நபர்களான கெஹெல்பத்தர மற்றும் செவ்வந்தி தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கை

வெளிநாட்டுப் பெண்ணை ஏமாற்றிய முச்சக்கரவண்டி சாரதி - நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

வெளிநாட்டுப் பெண்ணை ஏமாற்றிய முச்சக்கரவண்டி சாரதி - நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

  

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US