மலையகப் பிரதிநிதிகளை அடுத்த வாரம் சந்திக்கின்றார் ரணில்!
மலையக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு அடுத்தவாரம் இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியவற்றின் எம்.பிக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார், ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. வடிவேல் சுரேஷ் ஆகியோர் இந்தச் சந்திப்பில் பங்கேற்கவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது மலையக அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் உரிமைசார் விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மலையக அபிவிருத்தி

மலையகப் பெருந்தோட்ட மக்களின் மேம்பாட்டுக்காக 3000 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு இந்திய அரசு முன்வந்துள்ளது.
இந்த நிதியை எந்தெந்தத் திட்டங்களுக்குப் பயன்படுத்த வேண்டும், இது தொடர்பான கட்சிகளின் யோசனைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது.
மேலும் இந்த விடயம் தொடர்பில் அனைத்து மலையகப் பிரதிநிதிகளையும் ஒரே நேரத்தில் சந்திக்குமாறு ஜனாதிபதியிடம் ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஜனனி சொன்ன ஒரே ஒரு விஷயம், ஷாக்கான ஈஸ்வரி, கதிர் போடும் திட்டம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி... படப்பிடிப்பு தள போட்டோக்கள் Cineulagam