ரணில் 140க்கும் மேற்பட்ட வாக்குகளை பெறுவார்:வஜிர அபேவர்தன
ஜனாதிபதியை தெரிவு செய்ய நாடாளுமன்றத்தில் நடக்கும் வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்க 140 அல்லது அதற்கும் மேற்பட்ட வாக்குகளை பெறுவார் என ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
தான் இதற்கு முன்னர் கூறிய எதிர்வுகூரல் எதுவும் தவறியதில்லை எனவும் ரணில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவது 100க்கு நூறு வீதம் உறுதியானது எனவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டை அராஜக நிலையில் இருந்து மீட்க தேவையான விடயம் தொடர்பில் ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளர் என்ற வகையில் பொதுஜன பெரமுனவின உட்பட ஏனைய அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றேன்.
இலங்கைக்கு சிறப்பான காலம் உதயமாகும்

இரகசிய வாக்கெடுப்பில் ஜனாதிபதி தெரிவு செய்யப்பட உள்ளதால், கூடிய விரைவில் இலங்கைக்கு சிறப்பான காலம் உதயமாகும் என நம்பிக்கை கொள்ள முடியும்.
நாடாளுமன்றத்தில் உள்ள 225 பேரும் ஐக்கியமாக செயற்பட்டால், நாட்டை அராஜக நிலைமையில் இருந்து மீட்க முடியும். ஐக்கிய தேசியக்கட்சி ஏற்றுக்கொண்ட ஜனநாயக போராட்டம் தீ பற்றி எரியும் இடத்தை நோக்கி சென்றது.
நெருக்கடியான தருணத்தில் தெளிவாக கொள்கைகளை முன்வைத்த ஒரே தலைவர்

மக்கள் பிரதிநிதிகளின் வீடுகள் தீ மூட்டி அழிக்கும், அரச சொத்துக்களை அழிக்கும் செயற்பாட்டை நோக்கி சென்றால், நாடு முற்றாக அழிந்து விடும்.
எவரும் நாட்டை முன்நோக்கி கொண்டு செல்லும் கொள்கைகளை தெளிவாக நாட்டுக்கு முன்வைக்காத நெருக்கடியான தருணத்தில் வேலைத்திட்டத்தை தெளிவாக முன்வைத்த ஒரே தலைவர் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசஙிக் எனவும் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.