அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பலமுனைப்போட்டி இருக்காது! ஐக்கிய தேசியக் கட்சி உறுதி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டத்திற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆதரவு வழங்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரும், முன்னாள் அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
எனவே, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பலமுனைப்போட்டி இருக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில், எமது கட்சித் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க தீர்க்கதரிசனமாகக் கூறிய பல விடயங்கள் தற்போது உண்மை என நிரூபணமாகி வருகின்றன.
அதனால் தான் தனி ஒருவராக நாடாளுமன்றம் சென்று, முழு நாட்டையே நிர்வகிக்கும் வகையில் தற்போது தீர்மானங்களை அவர் எடுத்து வருகின்றார்.
வரிசை யுகம் முடிவு

இன்று வரிசை யுகம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் மின்வெட்டு நடைமுறையில் இல்லை. மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டமும் ஆரம்பமாகும்.
இது குறித்து ஜனாதிபதியின் பின்னால் பலர் அணிதிரள்கின்றனர். பலர் எதிர்காலத்தில்
இணைவார்கள் மற்றும் மொட்டுக் கட்சியும் ஜனாதிபதியிடம் வேலைத்திட்டத்தை
அனுமதிக்கின்றனர். எனவே, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பலமுனைப் போட்டி
இருக்காது என கூறியுள்ளார்.
ரோஹினியை சிக்க வைக்க போட்ட பிளானில் மனோஜிற்கு ஏற்பட்ட நிலைமை... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam