இலங்கை முதல்தடவையாக பாசிச பயங்கரவாதம் - ரணில் குற்றச்சாட்டு
இலங்கையில் மக்கள் போராட்டம் என்ற பெயரில் வெளிச்சக்திகள் இணைந்து செயற்பட்டதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.
இதன்காரணமாக இலங்கை முதல்தடவையாக பாசிச பயங்கரவாதத்தை எதிர்கொண்டது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நெருக்கடியை எதிர்கொள்ள சர்வகட்சியின் மூலமே தீர்வு காண முடியும். அனைத்து கட்சிகளும் ஒன்றிய வேண்டும் என ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் தவறுகளை தற்போது பேசுவதில் பயனில்லை. அதற்கான தீர்வினை விரைவில் காண வேண்டும்.
2024ஆம் ஆண்டுக்குள் இலங்கையை வழமையான நிலைக்கு கொண்டு வர முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கண்டியில் இன்று மஹாநாயக்கர்களை சந்தித்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி இந்தத் தகவல்களை வெளியிட்டார்.