அரங்கம் முழுவதையும் சிரிப்பில் ஆழ்த்திய ஜனாதிபதி ரணிலின் ஒற்றை பதில்
தான் அழகாக இருப்பதற்கான இரகசியத்தை கூறி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) அனைவரையும் சிரிப்பலையில் ஆழ்த்திய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
நுவரெலியா (Nuwara Eliya) - மீபிலிமான பகுதியில் விசேட புத்தாண்டு விழா இடம்பெற்றுள்ளது. இதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டிருந்ததுடன் இதன்போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதியின் பதில்
இதன்போது புத்தாண்டு விழா மைதானத்தில் போட்டிகளைப் பார்த்துக் கொண்டிருந்த ஜனாதிபதியின் அருகில் சென்ற அறிவிப்பாளர் எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறீர்கள்? என வினவியுள்ளார்.
இதற்கு ஜனாதிபதி சிரித்துக் கொண்டே ஐ.தே.க.வில் இணைந்து நான் அழகாகிவிட்டேன் என்ற சுவாரஸ்யமான பதிலை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதியிடம் அறிவிப்பாளர் கேட்ட கேள்வியும் அதற்கு கிடைத்த பதில்களும் ஒலிபெருக்கி மூலம் அரங்கம் முழுவதும் நேரலையாக ஒளிபரப்பப்பட்டு அனைவரையும் சிரிக்க வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 39 நிமிடங்கள் முன்

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri
