முஸ்லிம் கடைகளில் சாப்பிட்டால் மலட்டுத்தன்மை ஏற்படுமென கூறினார்கள் - நினைவுபடுத்தப்படும் அமைச்சர் மனுஷ
வாகனங்களில் இருந்த 'ஸ்ரீ' என்ற எழுத்து துடைக்கப்பட்டு சாணம் பூசப்பட்டது, முஸ்லிம் கடையில் துணி வாங்கினால், கொத்து சாப்பிட்டால் மலட்டுத்தன்மை ஏற்படும் என்றார்கள் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார (Manusha Nanayakkara) தெரிவித்துள்ளார்.
சுதந்திரத்திற்கு பின்னர் விதைக்கப்பட்ட இனவாதம் தொடர்பில் வவுனியாவில் (Vavuniya) வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
தமிழில் தேசிய கீதம்
மேலும் தெரிவிக்கையில், நாட்டில் தமிழ் மொழி பேசும் அனைத்து மக்களுக்கும் கௌரவம் அளிக்கும் வகையில் சுமார் 9 வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழில் தேசிய கீதம் பாடும் வாய்ப்பை ஏற்படுத்தியிருந்தார்.
இன்று எம்மத்தியில் காணப்படும் சகோதரத்துவ உறவுக்காக 09 வருடங்களுக்கு முன்னர் 2015ஆம் ஆண்டு ரணில் இந்த தீர்மானத்தை எடுத்தார். அரசியல் சோசலிசம், தாராளமயம், பாசிசம் மற்றும் இனவாதம் பற்றிய பல விஷயங்கள் நமக்காக உருவாக்கப்பட்டுள்ளன.
இனவாதம் பற்றி எங்களுக்கு நிறைய தெரியும். 1948இல் வெள்ளையர்கள் சுதந்திரத்தை வழங்குவதற்கு முன் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என்ற பாகுபாடு இருக்கவில்லை. நாங்கள் தமிழர், முஸ்லிம்கள் என்று பிரிக்கவில்லை. ஆனால் சுதந்திரத்திற்குப் பிறகு வடக்கு, தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு வாக்குகளைப் பெற இனவாதம் விதைக்கப்பட்டது.
இனவாதம்
அந்த இனவாதம் எவ்வளவு தூரம் சென்றது என்றால் பிள்ளைகள் படிக்க வேண்டிய யாழ். நூலகம் எரிக்கப்பட்ட இடத்திலிருந்து தென்னிலங்கையில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு வரை வெகுதூரம் சென்றது. இவை யாரோ ஒருவரின் தேவைக்காக உருவாக்கப்பட்ட கருத்துக்கள். வாகனங்களில் இருந்த 'ஸ்ரீ' என்ற எழுத்து துடைக்கப்பட்டு சாணம் பூசப்பட்டது.
முஸ்லிம் கடையில் துணி வாங்கினால், கொத்து சாப்பிட்டால் மலட்டுத்தன்மை ஏற்படும் என்றார்கள். இவற்றை எல்லாம் சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தங்கள் மூலம் தீர்க்க முயன்றபோது இனவாதிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இன்று எமது இளைஞர், யுவதிகளுக்கான தொழிற்படையைக் கட்டியெழுப்புவதற்கும் பயிற்சிகளை வழங்குவதற்கும் ஜனாதிபதி ஒன்றரை பில்லியன் ரூபாவை ஜனாதிபதி நிதியத்தின் மூலம் வழங்கி உள்ளார்.
எனவே இதன் மூலம் தொழிற்பாயிற்ச்சிகளை பெற்று சிறந்த தொழில்வாய்ப்புகளை உலகளாவிய ரீதியில் பெறவேண்டும். அதன் மூலம் கிடைக்கும் வருமானம் நாட்டிற்கு வரும்போது பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan
