சிங்கப்பூரில் முக்கியஸ்தர்களை சந்தித்த ஜனாதிபதி ரணில்
சிங்கப்பூருக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூரில் அரசியல் முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் Ng Eng Hen மற்றும் ஜனாதிபதி விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பைப் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு
மேலும், தெற்காசியப் பிராந்தியத்தில் பாதுகாப்பு கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதற்கான அதி முக்கியத்தும் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், பொதுவான பாதுகாப்புக் கவலைகளைத் திறம்பட நிவர்த்தி செய்ய நிலையான தகவல் தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பின் அவசியத்தையும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் தனது விஜயத்தின் போது, சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமா யாக்கோபையும் சந்தித்த ஜனாதிபதி ரணில் பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




