2022ஆம் ஆண்டு குறித்து ரணில் விக்ரமசிங்கவின் கணிப்பு!

Ranil Wickramasinghe Gotabhaya Rajapaksha Ruwan Wijewardena
By Steephen Oct 18, 2021 09:33 AM GMT
Report

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க(Ranil Wickramasinghe) என்பவர் அனுபவமுள்ள அரசியல்வாதி என்பதால், அவர் அரசியலை அளவீடுகளின் அடிப்படையில் கணிக்கும் திறனை கொண்டுள்ளார்  என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு குறித்து கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அடுத்த வருடம் மிகவும் கஷ்டத்திற்கு உள்ளாகும் வருடம் என அவர் கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் பொருத்தமற்ற வேலைத்திட்டங்களே இதற்கு காரணம் எனவும் ரணில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச(Gotabhaya Rajapaksha) பதவிக்கு வந்த உடனேயே வற் வரியை குறைத்து அரசின் வருமானத்தை முற்றாக இல்லாமல் ஆக்கியமை அனைத்து நெருக்கடிகளுக்கும் ஆரம்பமாக அமைந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு உறுப்பினர்களை சேர்க்கும் வேலைத்திட்டம் சம்பந்தமாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் ரணில் விக்ரமசிங்க இவற்றை கூறியுள்ளார்.

அத்துடன் மக்கள் மீது நாளுக்கு நாள் சுமைகள் அதிகரித்து வரும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணம் ரணில் விக்ரமசிங்கவின் நிர்வாகத்தில் எடுக்கப்பட்ட சில தீர்மானங்கள் என்ற பொய்யான கருத்தை சமூகமயப்படுத்த ஜனாதிபதி முயற்சித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன(Ruwan Wijewardena) இந்த கலந்துரையாடலின் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் அப்போது மக்கள் மீது சுமத்தப்பட்டிருந்த கடும் பொருளாதார சுமைகளை குறைத்ததே அன்றி அதிகரிக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US