வெளிநாடென்றில் சந்திரிக்காவுடன் மந்திராலோசனை நடத்திய ரணில்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுக்கும் இடையில் மந்திராலோசனை நடத்தப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி, அங்கு சந்திரிக்காவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இருவருக்கும் இடையிலான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசியல் மட்டத்தில் பேசப்படுகிறது. எனினும் அங்கு பேப்பட்ட விடயம் குறித்து தகவல்கள் ரகசியாகமாக பேணப்பட்டுள்ளது.
ரணில் - சந்திரிக்கா சந்திப்பு
ஜனாதிபதி ரணிலுடன், மஹிந்த அமரவீர, துமிந்த திஸாநாயக்க, லசந்த அழகியவன்ன, அனுர யாப்பா உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குழுவொன்றும் சென்றுள்ளது.

குறித்த நால்வரும் பண்டாரநாயக்க ஆதரவாளர்கள் என்ற வகையில் அண்மைக்காலம் வரை முக்கிய நபர்களாக இடம்பிடித்திருந்தனர்.
இவர்களுக்கு மேலதிகமாக ரணில் விக்ரமசிங்கவுடன் நிமல் லான்சாவும் இந்த பயணத்தில் இணைந்துள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.
உலக நீர் தினத்தில் பங்கேற்பதற்காக ரணில் விக்ரமசிங்க இந்தோனேசியாவுக்குச் செல்வது தொடர்பில் ஆரம்பம் முதலே அரசியல் அவதானிகள் கவனம் செலுத்தியுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam
மீனா அம்மா வீட்டிற்கு வந்ததும் கிண்டல் செய்து சிரித்த விஜயா, என்ன நடந்தது?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam