ரணிலுக்கு ஆதரவான போராட்டத்தில் பொலிஸாரை தாக்கியவர் கைது
கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் நடந்த போராட்டத்தின் போது பொலிஸ் அதிகாரி ஒருவரை தாக்கிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர் 52 வயதுடைய களுத்துறை பகுதியைச் சேர்ந்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸார் மீது தாக்குதல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக கடந்த 26ஆம் திகதி கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு முன்னால் பாரிய போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி மீது போத்தால் தாக்குதல் நடத்தினார்.
இதன்போது குறித்த பொலிஸ் அதிகாரி படுகாயங்களுக்கு உள்ளாகியிருந்தார்.
இந்தநிலையில், குறித்த விவகாரம் தொடர்பில் விசாரணைகளை நடத்திய பொலிஸார், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டவர்களிடம் இருந்து போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பெற்று ஆராய்ந்து சந்தேகநபரை அடையாளம் கண்டனர்.
இதனையடுத்து பொலிஸ் அதிகாரியை தாக்கிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.






மறைந்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணனுக்காக சூப்பர் சிங்கர் மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்... வீடியோ இதோ Cineulagam

இந்தியா மீது அணுகுண்டு வீச்சு... ட்ரம்பை கொல்ல வேண்டும்: அமெரிக்காவை உலுக்கிய சம்பவத்தில் பகீர் பின்னணி News Lankasri

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri
