ரணிலுக்கு எதிராக மார்ச்சில் வழக்கு தாக்கல்
புதிய இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை ஒரு மாத காலத்திற்குள் நிறைவு செய்து, மார்ச் மாதத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமா அதிபர் இன்று (28.01.2026) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
கொழும்பு கோட்டை நீதவான் இசுறு நெத்திகுமார முன்னிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
முதலாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகைத் தந்துள்ளார்.
அரச சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
திரண்டுள்ள ஆதரவாளர்கள்
இதன்படி, சற்று முன்னர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகைத் தந்துள்ளார்.
மேலும், நீதிமன்ற வளாகத்தில் ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவாளர்கள் பெருமளவில் திரண்டுள்ளனர்.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில், அரச பணத்தில் தனிப்பட்ட விஜயத்தினை மேற்கொண்டதாக சுமத்தப்பட்ட குற்றத்தின் அடிப்படையில், சிஐடியினரால் கடந்த ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு சில தினங்களின் பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri