அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து மாற்றப்பட்டார் ரணில்! அமெரிக்காவிலிருந்து வந்த ஹர்ஷ தகவல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைப் பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ரணில் நலம்...
மேலும், தான் ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டபோது அமெரிக்காவில் இருந்ததாகவும், நேற்று இரவு நாட்டுக்கு திரும்பிய நிலையில் இன்று காலை ரணில் விக்ரமசிங்கவை பார்வையிடுவதற்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு வருகைத் தந்ததாகவும் அவர் கூறினார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், என்னை அரசியலுக்கு கொண்டு வந்த எங்களுடைய முன்னாள் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை பார்வையிடுவதற்காக நான் வந்தேன். அவர் இப்போது நலமாக இருக்கின்றார்.
தற்போது அவசர சிகிச்சைப் பிரவில் சாதாரண சிகிச்சைப் பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.



