ஜே.வி.பியின் குரூர சிந்தனை : ஹிருணிகா வெளியிட்ட தகவல்
நெஞ்சில் ஈரமற்ற குரூர சிந்தனை கொண்டவர்களை உருவாக்க அரசாங்கம் முயற்சிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
ரணிலின் கைதுக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதிமன்றத்திற்கு முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நோய்வாய்ப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில்
தொடர்ந்து பேசிய அவர், ஜே.வி.பி தனது போராளிகளை கொண்டு சமூக வலைத்தளங்களில் குரூர சிந்தனைகளை வருங்கால தலைமுறையினருக்கு விதைத்து வருகின்றனர்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நோய்வாய்ப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட போது அவர் அங்கே இறந்து போகட்டும் என்றனர்.
அத்தோடு அவரின் மனைவிக்கு புற்றுநோய் என்றவுடன் அவரும் இறந்து போகட்டும் என்றவாறான பதிவுகள் பெரும் ஆபத்தான செயற்பாடாகும்.எங்கே நாம் இந்த சமூகத்தை இழுத்துச் செல்கிறோம்.
நாட்டின் தலைவன் என்பவன் இளகிய மனம் கொண்டிருக்க வேண்டும்.தலைவன் அனைவரையும் குற்றம் சாட்டுபவராக வைராக்கியம் கொண்டு மற்றையவர்களை மதிக்காமல் மிதிப்பவரானால் மக்களும் அதையே செய்வர்.
இவ்வாறு சென்றால் எமது எதிர்கால சந்ததியினரை பாதுகாக்க முடியாமல் போகும்.எந்தவித கருணையும் இல்லாத வீதி விபத்தில் சிக்கிய ஒருவரை காப்பற்ற மனம் கொள்வதாக சமுதாயத்தை உருவாக்கவா இவர்கள் முயற்சிக்கின்றனர்.
இந்த செயற்பாடுகள் அநுரகுமார திசாநாயக்கவுக்கும் ஏற்பட கூடும்.அப்போது அவர் தனிமைப்படுத்தடுவார் எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





இது இங்கிலாந்து போலவே இல்லை... பாதிக்குப் பாதி புலம்பெயர்ந்தோர் வாழும் பிரித்தானிய நகரம் News Lankasri
