'மூளை வடிகால்' பிரச்சினைக்கு நட்டஈடு வழங்குமாறு ஜி77 மாநாட்டில் ரணில் கோரிக்கை
பொதுவாக 'மூளை வடிகால்' என்று அழைக்கப்படும் தெற்கின் வறிய நாடுகளில் இருந்து திறமையான நிபுணர்களை ஆட்சேர்ப்பு செய்ததற்காக நட்டஈடுகளை வழங்குமாறு, உலகளாவிய வடக்கின் பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த கோரிக்கையானது கடந்த வெள்ளிக்கிழமை (15.09.2023) ஜி77 உச்சிமாநாட்டில் ஜனாதிபதியால் விடுக்கப்பட்டுள்ளது.
ஹவானாவில் 134 நாடுகளின் ஜி77 மற்றும் சீன உச்சிமாநாட்டில் பேசிய ஜனாதிபதி விக்ரமசிங்க, 'மூளை வடிகால்' பிரச்சினையைக் குறிப்பிட்டுள்ளார்.

அச்சுறுத்தல்
அத்துடன் இது 'படித்த மனிதவளத்தை' இழக்கச் செய்வதாகவும், உலகளாவிய தெற்கு நாடுகளை அச்சுறுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் தென் கொரியாவின் வெற்றிகளை அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். அந்த நாடுகள் மனிதவளத்தை வளர்ப்பதன் மூலமே வளர்ச்சியைக் கண்டன என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
கணவரை பிரிந்த நிலையில் ஹன்சிகா எங்கே சென்றிருக்கிறார் பாருங்க.. அதுவும் யாருடன் தெரியுமா? Cineulagam