இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று பிற்பகல் இந்தியா பயணமாகியுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
இதேவேளை, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
தலைமையிலான பிரதிநிதிகள் இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு விஜயம்
மேற்கொண்டுள்ளனர்.
இந்த விஜயத்தின்போது, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவுடனும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளமையால், அவரின் கீழ் உள்ள அமைச்சுக்களின் பொறுப்புக்கள், அதன் இராஜாங்க அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்றும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 மணி நேரம் முன்

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
