கொழும்பில் மனைவியுடன் இணைந்து இசை நிகழ்ச்சியை ரசித்த ஜனாதிபதி
கொழும்பில் செனுக் விஜேசிங்க வழங்கிய இசை நிகழ்ச்சியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோர் கண்டுகளித்துள்ளார்கள்.
குறித்த நிகழ்வானது, நேற்று (19.03.2024) பிற்பகல் கொழும்பு லயனல் வென்ட் திரையரங்கில் நடைபெற்றுள்ளது.
இந்த இசை நிகழ்ச்சியில் கிறிஸ்டோ பிரின்ஸ் டிரம்ஸ் குழுவினர் இசைத்ததோடு நதினி ஒலேகாசெக்ரேம் மற்றும் ஹேமால் குருவிதாராச்சி ஆகியோரும் கலைஞர்களாக இணைந்துகொண்டுள்ளனர்.
அதேவேளை, சோல் சவுண்ட்ஸ் அகாடமி பாடகர் குழுவினர் இந்த இசை நிகழ்ச்சியில் பாடல்களை இசைத்துள்ளனர்.
ஏராளமான ரசிகர்கள்
இளம் வயதிலேயே பியானோ பயிற்சியை ஆரம்பித்த செனுக் விஜேசிங்க 5 வயதில் பாடத் தொடங்கியுள்ளார். லண்டனில் உள்ள ரோயல் ஸ்கூல் ஆஃப் சிங்ஜிங்கில் டேவிட் ரோட்ரிகோ மற்றும் சி ஹோ மேக் ஆகியோரின் கீழ் இவர் கற்றுள்ளார்.
அத்துடன், ஷெனுக் விஜேசிங்க பாடல், இசை மற்றும் நடிப்பு ஆகிய துறைகளில் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
மேலும், இந்த இசை நிகழ்ச்சியை காண உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான ரசிகர்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
