இறுதி நேர சிறப்பு நேர்காணலில் ரணில் பகிரங்க எச்சரிக்கை
மாலைதீவு பொருளாதார ரீதியாக சற்று மோசமான நிலைமையில் இருப்பதால் அங்கு வேலை செய்யும் இலங்கையர்களில் குறைந்தது 10 ஆயிரம் பேராவது மீண்டும் இலங்கைக்கு வரவேண்டியிருக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றையதினம் (18.09.2024) ஊடகவியலாளர்களுடன் ஒரு சிறப்பு நேர்காணலில் கலந்துகொண்ட போதே இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
“மாலைதீவு சற்று மோசமான நிலைமையில் தான் உள்ளது. எனினும், இவ்வாரத்திற்குள் நிதியை பெற்றுக்கொள்ள அந்நாடு முயற்சிக்கின்றது. அந்நாட்டின் நிதியமைச்சர் இங்கும் வந்து எமது உதவியைக் கோரியுள்ளார்.
நேரடித் தொடர்பு
அங்கு ஏதும் பிரச்சினை ஏற்பட்டால், அங்கு வேலை செய்யும் 30 - 40 ஆயிரம் இலங்கையர்களுக்கு பாதிப்பாக அமையும். குறைந்தது 10 ஆயிரம் பேராவது மீண்டும் இலங்கைக்கு வரவேண்டியிருக்கும்.
எமது நாட்டிலிருந்துதான் உணவு உள்ளிட்ட பல விடயங்கள் அங்கு அனுப்பப்படுகின்றன. அது இல்லாது போகும். அத்தோடு, மாலைதீவுக்கு வருகைத் தரும் சுற்றுலாப் பயணிகள் இங்கே வருவதை தவிர்க்கிறார்கள்.
அவர்கள் இங்கே வந்துவிட்டு மாலைத்தீவுக்கு செல்வதில்லை. எனவே, இதுவும் பாதிக்கப்படலாம். எனவே, மாலைதீவு பிரச்சினை எம்முடன் நேரடித் தொடர்பாக இருப்பதால், இதனை நிவர்த்தி செய்வது எப்படி என்றுதான் நடவடிக்கை எடுக்கிறோம்.
இல்லாவிட்டால், மாலைதீவில் பிரச்சினை ஏற்பட்டால் அது இலங்கையையும் தான் பாதிப்படையச் செய்யும்” என்றுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

சூப்பர் சிங்கர் போட்டியாளருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் ஆண்டனி... சந்தோஷத்தில் போட்டியாளர், வீடியோ Cineulagam

எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பிரபலம், அவரால் ஏற்படும் பரபரப்பு... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
