மீண்டும் இந்தியா பறக்கிறார் ரணில்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகலாவிய விசேட முன்னேற்றங்கள்' குறித்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே அவர் நாளையதினம் (27) இந்தியா செல்லவுள்ளார்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை (28) புதுடில்லியில் உலகலாவிய முக்கிய இராஜதந்திரிகளின் பங்கேற்புடன் இந்த கலந்துரையாடல் ஆரம்பமாகவுள்ளது.
சிறப்புரை
இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரதம விருந்தினராக பங்கேற்கவுள்ள இந்த கலந்துரையாடலில் ரணில் விக்ரமசிங்கவுடன், கனடாவின் முன்னாள் பிரதமர் ஸ்டீவன் ஹாபர், அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் டோனி எபொட் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதன் போது தென்னாசியா தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறப்புரையாற்றவுள்ளார்.
அத்தோடு, இந்த விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் (Narendra Modi), முன்னாள் ஜனாதிபதி ரணில் விசேட சந்திப்பிலும் கலந்து கொள்ளவுள்ளார்.
இரண்டாவது முக்கிய விஜயம்
அத்தோடு இந்தியாவிலுள்ள முக்கிய தொழிலதிபர்களுடனான சந்திப்பிலும் முன்னாள் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க குறுகிய காலத்துக்குள் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் இரண்டாவது முக்கிய விஜயம் இதுவாகும்.
எதிர்வரும் 2ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அவர் நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
