கைப்பாவையாக மாறியுள்ள ரணில் விக்ரமசிங்க - மேர்வின் சில்வா குற்றச்சாட்டு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதைகுழியைச் சூழ்ந்துள்ள போர்வீரன் போன்றவர் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
ரணிலை சூழ்ந்துள்ள கல் தூண்கள்

திறமையான அரசியல்வாதியான ரணில் விக்கிரமசிங்க தற்போது கைப்பாவையாக மாறியுள்ளார். ரணில் விக்ரமசிங்கவை கல் தூண்கள் சூழ்ந்துள்ளதால் இவ்வாறு கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், ராஜபக்சவுக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான இரகசிய ஒப்பந்தம் குறித்தும் அவர் இதன் போது கருத்து வெளியிட்டுள்ளார்.
ராஜபக்சவின் வாதங்களுக்கு செவிசாய்க்காமல் ரணில் விக்ரமசிங்கே ஜனாதிபதி பதவியில் இருந்து விலகினால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் நிச்சயம் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்வார்கள் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan
Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri