ரணிலிடமிருந்து குறுஞ்செய்தி வந்ததா..! உண்மையை போட்டுடைத்தார் முஜிபுர் ரஹ்மான் (Video)
தான் நாடாளுமன்ற பதவியை இராஜினாமா செய்யும் போது அது தொடர்பில் எவ்வித தகவலையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனக்கு அனுப்பவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அவர் எவ்வித குறுஞ்செய்தியையும் தனக்கு அனுப்பவில்லை எனவும், ஜனாதிபதி பொய் கூறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் ஜனாதிபதி கருத்து தெரிவிக்கும் போது, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக வேண்டாம் என முஜிபுர் ரஹ்மானுக்கு நான் அறிவுறுத்தியிருந்தேன்.
ரணிலின் கருத்து
முஜிபுர் ரஹ்மானை நானே நாடாளுமன்றத்துக்கு அழைத்து வந்தேன். அவர் பலிக்கடா ஆக்கப்படப் போவது எனக்கு தெரியும்.
முஜிபுர் ரஹ்மானை நாடாளுமன்றத்தில் வைத்திருக்க முயற்சித்தேன், இனிமேல் அது பற்றி பேசப்போவதில்லை என குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பில் எமது செய்தி சேவைக்கு பிரத்தியேகமாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.




