சர்வதேசத்தை நாட வேண்டிய அவசியம் இல்லை: மட்டக்களப்பில் வைத்து உறுதியாக தெரிவித்த ரணில்
உள்நாட்டு பிரச்சினைகளை நாட்டுக்குள்ளேயே தீர்த்துக் கொள்ள வேண்டும், அதற்காக சர்வதேசத்தை நாட வேண்டிய அவசியம் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு சென் மைக்கல் கல்லூரியின் 150ஆவது ஆண்டு பூர்த்தி விழா நிகழ்வில் நேற்றைய தினம் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

பிள்ளையான் - வியாழேந்திரன் எமக்கு உதவி செய்கின்றனர்: சாணக்கியனே எதிரி: அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் எச்சரிக்கை(Video)
ஒரே தேசமாக முன்னோக்கிச் செல்வது
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய கீதத்தில் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் என்று கூறப்படுவதால் அதனை சிங்களத்தில் இசைத்தாலும் தமிழில் இசைத்தாலும் பிரச்சினைகள் இல்லை.
அனைவரும் ஒன்றுபட்டு ஒரே தேசமாக முன்னோக்கிச் செல்ல வேண்டியது மிகவும் அவசியம். வேறுபாடுகளை முன் நிறுத்தி மோதல்களை ஏற்படுத்திக் கொண்டதால் நாடு என்ற வகையில் இலங்கை சரிவை சந்திக்க நேரிட்டது.
அரசியல் ரீதியான வேறுபாடுகளும் இலங்கையை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. நாட்டின் பொருளாதாரம் முழுமையாகச் சரிவடைந்ததால் கடந்த வருடத்தில் நாட்டு மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கியிருந்தனர்.
ஒன்றுபட்டு பயணிக்க வேண்டும்
அனைத்து வேறுபாடுகளையும் விடுத்து நாட்டுக்காக அனைவரும் ஒன்றுபட்டு பயணிக்க வேண்டும். உள்நாட்டு பிரச்சினைகளை நாட்டுக்குள்ளேயே தீர்த்துக் கொள்ள வேண்டும்.
அதற்காக சர்வதேசத்தை நாட வேண்டிய அவசியம் இல்லை என கூறியுள்ளார்.
மேலும், இன மற்றும் மதப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல் ஒரு நாடு என்ற வகையில் முன்னோக்கிச் செல்ல முடியாது என்பதால் விரைவில் அதற்குரிய தீர்வுகளைக் காண்பதற்காக அனைத்து தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

Optical illusion: படத்தில் '44' மற்றும் '33' என்ற மாறுபட்ட இலக்கங்களில் '88' எங்கே மறைந்துள்ளது? Manithan

திருமணத்திற்கு 3 ஆண்டுகளுக்கு முன் கணவருடன் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே.. வீடியோ இதோ Cineulagam

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri
