பிள்ளையான் - வியாழேந்திரன் எமக்கு உதவி செய்கின்றனர்: சாணக்கியனே எதிரி: அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் எச்சரிக்கை(Video)
மட்டக்களப்பில் நேற்றையதினம் பொரும் குழப்பநிலையை தோற்றுவித்திருந்த விடயமாக அம்பிட்டிய சுமன ரத்ன தேரரின் போராட்டம் காணப்பட்டது.
குறித்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அவர், நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனையும் அவரது அரசியல் செயற்பாடுகளையும் கடுமையான வார்த்தைகள் கொண்டு விமர்சித்திருந்தார்.
இதன்போது ஒரு சந்தர்ப்பத்தில் “எமது பிள்ளையான் அமைச்சர் எமக்கு ஒரு வார்த்தை கூட கூறியதில்லை. எனினும் இந்த சாணக்கியன் என்ற மனிதன் எப்போதும் நாடாளுமன்றம் சென்று சிங்களவர்களை தாக்குகின்றார்.
மற்றுமொரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் இருக்கின்றார்(வியாழேந்திரன்). அவரும் ஒரு போதும் சிங்களவர்களை தாக்கியதில்லை.” என சுட்டிக்காட்டியுள்ளார்.
இனவாத செயற்பாடு
மேலும் தெரிவித்த அவர்,
சிங்களவர்களை தாக்குவதை அவர் நிறுத்தாவிட்டால், எங்கள் போராட்டத்தை நிறுத்தபோவதில்லை.
நாம் எந்தவொரு தமிழருக்கும் முஸ்லிம் இனத்தவருக்கும் எதிராகவும், இனவாத மதவாதத்தை பரப்பியது இல்லை. அதன் பிரதிபலனாகவே நாம் இந்த மட்டக்களப்பு நகரில் வாழ்கின்றோம்.
நாம் 35 ஆண்டுகள் வாழ்கின்றோம். எல்லோருக்கும் என்னைப்பற்றி தெரியும். எந்தவிதமான இனவாத மதவாதத்தையும் நான் முன்னெடுத்ததில்லை.
தாய்பிள்ளை போன்று வாழ்கின்றோம். சாணக்கியன் என்ற மனிதன் எப்போதும் நாடாளுமன்றிற்கு சென்று சிங்களவர்களை விரட்டியடிக்க கரவை மாடுகளின் உரிமை பற்றி பேசுகின்றார்.
சிங்களவர் சோறு சாப்பிடுவதை பற்றி பேசவில்லை. சாணக்கியன் நாடாளுமன்றிற்கு சென்று இனவாதத்தை பரப்புகின்றார்.
சிங்கள இனத்தை தாக்கும் செயற்பாடு
டி.என்.ஏ பணத்தில் வாழ்கின்றார். புலம்பெயர் மக்களின் பணத்தில் வாழ்கின்றார். அவ்வாறு செய்து கொண்டு அப்பாவி மற்றும் ஏழை தமிழ் மக்களை பயன்படுத்தி இனவாத்தை பரப்புகின்றார்.
இதனை நிறுத்த வேண்டும். இது நிறுத்தப்படும் வரை நாமும் ஓர் இனம் என்ற ரீதியில் செயற்படவேண்டும்.
முஸ்லிம் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். இதுவரையில் ஒரு போதும் சிங்கள இனம் என்ற அடிப்படையில் ஒரு வார்த்தை பேசியதில்லை.
எங்கள் மீது விரலை நீட்டியதில்லை. எனினும் இந்த சாணக்கியன் எந்த நாளும் சிங்கள இனத்தை தாக்கும் வேலையை செய்கின்றார்.
நகரம் தோறும் அப்பாவி தமிழ் மக்களை கொண்டு வந்து இருத்தி போராட்டம் நடத்துகின்றார். ஏன் அவர் அவ்வாறு செய்கின்றார்.
ஏனென்றால் அவருக்கு புலம்பெயர் சமூகத்திடமிருந்து பணம் பெற்றுக்கொள்கின்றார். எமக்கு புலம்பெயர் சமூகங்கள் பணம் வழங்கவில்லை, எமக்கு யாரும் உதவவில்லை.” என தெரிவித்துள்ளார்.