சுதந்திர தின கொண்டாட்டங்களுக்காக அதிக அளவு செலவு செய்த ரணில்
2023ஆம் ஆண்டுக்கான சுதந்திர தின கொண்டாட்டங்களுக்காக அரசாங்கம் அதிகளவிலான தொகையை செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2022 ஆம் ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக 9.5 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் இந்த வருட சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக 40 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் இன்றைய பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு நாட்டில் பணவீக்கம் அதிகமாக உள்ளதால் பெரும் செலவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த வருடங்களில் சுதந்திர தின விழாக்களுக்காகச் செய்யப்பட்ட செலவுகள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
2021 ஆம் ஆண்டில் 80,662,000.36 ரூபாயும், 2020 ஆம் ஆண்டில் 63,214,561.99 ரூபாயும், 2019 ஆம் ஆண்டில் 68,130,091.15 ரூபாயும், 2018 ஆம் ஆண்டில் 86,805,319.35 ரூபாயும் செலவிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.