அதிகாரப் பகிர்வின் மூலம் சுயநல அரசியல் இறங்கும் ரணில்: சாடுகிறார் கம்மன்பில
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது அதிகாரப் பகிர்வின் மூலமாக தனது சுயநல அரசியலையே முன்னெடுப்பதற்கு தயாராகி வருகின்றார் என பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பு - கோட்டையில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நேற்று(14.08.2023) செய்தியாளர்களைச் சந்தித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது அதிகாரப் பகிர்வின் மூலமாக தனது சுயநல அரசியலையே முன்னெடுப்பதற்கு தயாராகி வருகின்றார்.
நியாயமான பதில்

அவர் அதிகாரங்களைப் பகிர்வதாகக் கூறி, மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட மாகாண சபைகளுக்கு தேர்தலை நடத்தாது தனது தேர்தல் பரப்புரைக்காக ஆளுநர்கள் மற்றும் இதர தரப்பினருக்கு அதிகாரங்களை வழங்குவதற்கு முயல்கின்றார்.
ஆகவே இந்தச் செயற்பாடானது அதிகாரத்தினைப் பகிரும் செயற்பாடு அல்ல. அதிகாரத்தினை குவிப்பதாகும்.
அந்த விடயத்தினை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். மேலும், அதற்கு நியாயமான பதில் அளிக்கப்பாடாது சர்வகட்சிக் கூட்டத்தினை நடத்துவதில் எவ்வித பயனுமில்லை என்ற முடிவினை நாம் கொண்டுள்ளோம்.” என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 13 மணி நேரம் முன்
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri