லண்டனில் சிறப்புரை ஆற்றவுள்ள ரணில்..!
விசேட கலந்துரையாடல் ஒன்றில் பங்கேற்பதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) லண்டனுக்கு (London) விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நமது காலத்தில் பெரும் பிரச்சினைகளை கையாளுதல் என்ற தொனிப்பொருளில் இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் பங்கேற்பதற்காகவே அவர் நாளை (3) பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
குறித்த கலந்துரையாடலானது லண்டன் - கொன்வே மண்டபத்தில் எதிர்வரும் 05 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளது.
அரசியல் சந்திப்பு
பொருளாதார ரீதியில் பாதாளத்தில் வீழ்ந்த இலங்கையின் மறுமலர்ச்சி திட்டம், ஊழல் மோசடி, மனித உரிமை மீறல் நெருக்கடிகளை எதிர்கொள்ளல் மற்றும் 2019 ஆம் ஆண்டில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளினால் முன்னெடுக்கப்பட்ட உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் போன்ற விடயங்கள் குறித்து ரணில் விக்ரமசிங்க இந்த நிகழ்வில் சிறப்புரை ஆற்ற உள்ளார்.
இதனை தொடர்ந்து லண்டனில் தங்கியிருக்கும் நாட்களில் பல்வேறு அரசியல் சந்திப்புகளிலும் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |