ஜனாதிபதி ரணில் புரட்சிகரமான சவாலை ஏற்றவர் : மனுஷ நாணயக்கார
நாடு வீழ்ச்சியடையும் போது மக்கள் இறப்பதைத் தடுக்கும் புரட்சிகரமான சவாலை ஏற்றுக்கொண்டவர் ஜனாதிபதி ரணில் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார (Manusha Nanayakkara) தெரிவித்துள்ளார்.
அம்பாறையில் (Ampara) நேற்றுமுன்தினம் (23) இடம்பெற்ற ‘ஸ்மார்ட் யூத் கிளப்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இளைஞர்களின் இலக்குகள்
கடந்த காலங்களில் வடக்கு மற்றும் தெற்கில் உள்ள இளைஞர்களின் இலக்குகள் தவறான திசையில் திசைதிருப்பப்பட்டது இதனால் நாடு வீழ்ச்சியடைந்ததுடன், இளைஞர்கள் தமது ஆற்றலை சரியான திசையில் செலுத்தவில்லை என அமைச்சர் கூறினார்.
இந்நிலையில், சேகுவேரா ஒரு புரட்சியாளர் அதனால்தான் அவரைப் படித்து நம்பும் இளம் தலைமுறையினர் இருக்கிறார்கள். ஒரு புரட்சியாளனுக்கு இருக்க வேண்டிய சிறந்த குணம் அன்பு என சேகுவேரா ஒர் பத்திரிகையாளரிடம் தெரிவித்தார்
மேலும், நம் நாடு பொருளாதாரத்தில் வீழ்ந்தது, மக்கள் வரிசையில் நின்று இறந்தனர். ஜனாதிபதி ரணில் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அந்த சவாலை ஏற்றுக்கொண்டது.
தொழில்முறை பயிற்சி
மக்களின் வேதனைகளையும், துயரங்களையும் கண்டு அவர் சவால்களை ஏற்றுக்கொண்டார். உண்மையான புரட்சியாளர்கள் சவால்களை ஏற்று மக்களுக்காக நின்றார்கள்.
தற்போது எலோன் மஸ்க்கை ஒரு பொருளாதார கொலையாளி என்று அழைக்கிறார்கள். இன்று நாம் வரலாற்றிலிருந்து எதிர்காலத்திற்கு வந்துள்ளோம்,
எலோன் மஸ்க் போன்று இளைஞர்களை திறமைமிக்கவர்களாக சிறந்த தலைவர்களாக வலுப்படுத்த கிராமத்திலிருந்து தொழில்முறை பயிற்சிகளை வழங்குகிறோம்.
இந்த பொருளாதாரக் கொலைகாரர்கள் கூறுவது போல் நாட்டை பின்னோக்கி கொண்டு செல்வதற்காக அல்ல என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |