ஜப்பானில் நிதியுதவி தொடர்பில் ரணில் கடினமான தருணங்களை எதிர்கொள்வார்! வெளியாகும் எதிர்வுகூறல்கள்
இலங்கையின் ஜனாதிபதி எதிர்வரும் 27ஆம் திகதியன்று ஜப்பானுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தும்போது கடினமான தருணங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மைய சம்பவங்களின் அடிப்படையில், ஜப்பான் எந்த ஒரு இடைக்கால நிதியுதவிகாக உடனடியாக பில்லியன் டொலர்களை வழங்காது என்பதற்கான அறிகுறிகளே உள்ளன.
ஜப்பான் அரசாங்கத்தின் குற்றச்சாட்டு
ஜப்பானிய தலைவர்களுடனான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பேச்சுக்கள் இந்த நிதியுதவியை கோரல் மற்றும் இலங்கைக்கான பிற உதவிகளை உள்ளடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறாயினும், அமைச்சர் ஹர்ச டி சில்வாவை இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான அமைச்சர் டி சில்வாவை மீண்டும் அமைச்சரவையில் இணைத்துக் கொண்டமை ஜப்பானை புண்படுத்தியுள்ளது என்பது இரகசியமல்ல என்று ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரிடம் ஜப்பானிய தூதுவர் மிசுகேரி ஹிடேகி இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.
உத்தியோகபூர்வ விசாரணை முடியும் வரை துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சராக டி சில்வாவின் பொறுப்பை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏற்றுக்கொண்டார். இருப்பினும், அவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது.
எனினும் விசாரணைகளில் குற்றமற்றவர் என்ற அடிப்படையில் அவர் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
நிபுணர்களின் எச்சரிக்கை
இந்நிலையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு வந்த ஜப்பானிய நிறுவனமான தாய்சே நிறுவனத்திடம் 100 மில்லியன் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டை அமைச்சர் டி சில்வா வன்மையாக மறுக்கிறார்.
உள்ளூர் அரசியல்வாதிகள் லஞ்சம் கோருவது தொடர்பான அறிக்கைகள் பல மேற்குலக அரசாங்கங்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு தூண்டுகின்றன. இது சர்வதேச நாணய நிதியத்தின் கவனத்தையும் ஈர்க்கும் ஒரு அம்சமாகவும் உள்ளது.
எனவே நிதி நிறுவனங்களிடம் இருந்து இடைக்கால நிதியைப் பெறுவதற்கு ஏற்படும்
தாமதம், கடுமையான பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள்
எச்சரித்துள்ளனர்.