லண்டன் சென்று சிக்கலில் மாட்டியுள்ள ரணில்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெள்ளிக்கிழமை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்தபோது மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணம் தொடர்பான விசாரணைக்காக இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதியின் செயலாளராகப் பணியாற்றிய சமன் ஏகநாயக்க மற்றும் அவரது தனிப்பட்ட உதவியாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோரிடமிருந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஏற்கனவே வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது.
பட்டமளிப்பு விழா
ரணில் விக்ரமசிங்க அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த போது> லண்டனில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள பிரித்தானியா சென்றமை குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் - காலை திருவிழா




