எலிசபெத் ராணியின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்ளவுள்ள ரணில்
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிக் கிரியைகளில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்கவுள்ளார்.
ரணில் பிரித்தானியா விஜயம்
ராணியின் இறுதிக் கிரியைகளில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி ரணில் பிரித்தானியா விஜயம் செய்யவுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதியின் பிரித்தானிய விஜயத்திற்கான ஏற்பாடுகளை ஜனாதிபதி செயலகம் மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பிரித்தானிய அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்கள்
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி, பிரித்தானிய அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எதிர்வரும் 18ஆம் திகதி ஜனாதிபதி பிரித்தானியா விஜயம் செய்வார் என தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறெனினும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரித்தானிய விஜயம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத் தரப்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு வயது ஏறவே ஏறாதா? 40 வயதிலும் சுடிதாரில் ரசிகர்களை கிறங்கடிக்கும் தொகுப்பாளினி டிடி! Manithan
புதன் வக்ர நிவர்த்தியால் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த 3 ராசிகளுக்கு தான்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan