நான் கூறியதை கேட்டிருந்தால்..! ரணில் கூறியுள்ள விடயம்
தான் அறிவுறுத்தியபடி எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால், ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துளு்ளார்.
குறிப்பாக கொழும்புக்கு இதுபோன்ற ஒன்றைச் செய்திருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
ஐந்து ஆண்டுகளுக்கு பின் யானை சின்னம்
அவர் மேலும் தெரிவிக்கையில், நான் சொன்னது போல் எதிர்க்கட்சிகள் ஒன்றுபடாததால் மக்கள் பிளவுபட்டுள்ளனர். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, நாங்கள் யானை சின்னத்தின் கீழ் போட்டியிட்டோம். இதை ஒரு தொடக்கமாகக் கருதலாம். சில பகுதிகளில் முடிவுகள் நன்றாக உள்ளன.
நாம் திருப்தி அடையலாம். இப்போது ஐக்கிய தேசியக் கட்சி வேலை செய்ய வேண்டும். இப்போது எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி மக்களுக்கு ஏதாவது ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும். நான் தேர்தல் பிரச்சாரப் பணிகளில் பங்கேற்கவில்லை. இது இளம் தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
புதிய உறுப்பினர் அறிமுகம்
இது ஒரு பரீட்சார்த்த நடவடிக்கை. இதில் நல்ல விடயங்களும் உள்ளன, தோல்விகளும் உள்ளன. தற்போது நம்மிடம் உள்ள பலத்தைக் கொண்டு எப்படி முன்னேறுவது என்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டும். யானை சின்ன வேட்பாளர் என பரிந்துரைக்கப்படும் போது மக்கள் வாக்களிக்க வருவார்கள் என்று சிலர் கூறினர்.
யானை சின்ன வேட்பாளர் என்பதால் மட்டும் மக்கள் வாக்களிக்க வரமாட்டார்கள் என்று இப்போது தெரிகிறது. இப்போது நாம் கட்சிக்கு புதிய உறுப்பினர்களை அறிமுகப்படுத்த வேண்டும். இதற்குப் பிறகு, இளைய தலைமுறையினர் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு முன்னேற வேண்டும் என கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 21 மணி நேரம் முன்
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
இந்த வார சண்டே எல்லா தொலைக்காட்சியிலும் விஜய் பட ஸ்பெஷல் தான்... என்னென்ன படங்கள் பாருங்க... Cineulagam
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri