தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிக்கும் ஜனாதிபதி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரத்தை ஆரம்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மாதம் முதல் பிரசாரப்பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் பிரசாரப் பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகின்றது.
அதிகாரபூர்வ அறிவிப்பு
தொகுதி அடிப்படையில் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்வது முதல், மாவட்ட ரீதியில் பிரதான பிரச்சாரக் கூட்டங்களை நடாத்தும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆளும் கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அமைச்சர்களுக்கு முக்கிய பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
எவ்வாறெனினும் தேர்தல் பிரசாரம் தொடர்பில் ஜனாதிபதி தரப்பிலோ அல்லது பொதுஜன முன்னணி தரப்பிலோ இதுவரையில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 12 மணி நேரம் முன்

'அன்னை இல்லம்' தற்போதைய மதிப்பு இத்தனை கோடியா.. பிரபுவின் அண்ணனுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு Cineulagam

SBI சேமிப்பு திட்டத்தில் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்து ரூ.32 ஆயிரம் வட்டியை பெறலாம்.., என்ன திட்டம் தெரியுமா? News Lankasri

ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கொலை மிரட்டல்... எதற்கும் தயார் நிலையில் ஈரான் இராணுவம் News Lankasri
