மனோ கணேசன் சிந்தித்து முடிவெடுத்திருக்கலாம்: ரணில் விசனம்
சஜித் பிரேமதாசவுடன் (Sajith Premadasa) சேர்ந்ததை நியாயப்படுத்தவே தமிழ் முற்போக்குக் கூட்டணி பல்வேறு காரணங்களைக் கூறுகிறது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
தமிழ்ப் பத்திரிகை ஆசிரியர்கள் சிலருடன் சம்பாஷணையில் ஈடுபட்டபோது கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் சஜித்திற்கு ஆதரவளித்துள்ளனர். ஆனால், அவர்களுடன் நீங்கள் பேச்சு நடத்தி மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முயலவில்லை என்ற விமர்சனம் உள்ளதே என்று பத்திரிகை ஆசிரியர் ஒருவரால் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
தற்போதைய நிலை
இது குறித்து பதிலளித்த ஜனாதிபதி, "தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர்கள் அடிக்கடி என்னுடன் பேசியவர்கள். இப்போது அவர்கள் சஜித்துடன் இணைந்துவிட்டு, அதனை நியாயப்படுத்த என்னை விமர்சிக்கின்றனர்.
எனது அமைச்சரவையில் திகாம்பரம் இருந்தார். அமைச்சராக மனோவும் இருந்தார். அதற்காக இப்போதுள்ள நிலையை சீர்செய்ய என்னுடன் இணைந்து பணியாற்றுங்கள் என்று தான் கூறினேன். அதைவிடுத்து குறைகூறி கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.
அது காலத்தை வீணடிக்கும் செயல். தலைவர் மனோ கணேசன் மக்கள், பொருளாதாரம் குறித்து சிந்தித்து முடிவெடுத்திருக்கலாம். அவருக்கு இன்னும் தாமதமாகவில்லை” என விளக்கமளித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri

இன்று விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம் முடிந்தது.. புதிய ஜோடியின் போட்டோ இதோ Cineulagam

என்ன கொடுமை இது, நான் சீரியல் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.. எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் புலம்பல் Cineulagam

Optical illusion: உங்கள் கண்களை ஒரு நிமிடம் குருடாக்கும் மாயை...இதில் இருக்கும் இலக்கம் என்ன? Manithan
