தமிழர்களுக்கான பொது வேட்பாளர் தொடர்பில் ரணில் கட்சி தரப்பின் நிலைப்பாடு
பொது வேட்பாளர் என்பது தமிழர் மத்தியில் ஒரு மாயையை ஏற்படுத்துகின்ற விடயம் என ரணில் 2024 (Ranil 2024) செயலணியின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் (Ganabathipillai Mohan) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் (Batticaloa) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
" பொதுவேட்பாளர் என்பது தமிழர் மத்தியில் ஒரு மாயையை ஏற்படுத்துகின்ற விடயம் என்றுதான் நான் கருதுகின்றேன்.
கடந்த கால தேர்தல்கள்
ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் கடந்த காலத்தில் தமது விரல்களைச் சுட்டுக் கொன்றதை மறக்கமாட்டார்கள் என நினைக்கின்றேன்.
இந்நிலையில், தேர்தல் நடைபெறும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. எனவே, தேர்தலை மையமாக வைத்து அபிவிருத்திகள் நடைபெறுகின்றன எனும் கருத்துக்கள் எதிர்க் கட்சிகளினது தாங்க முடியாத மனச் சஞ்சலமாகும்.
ஏனெனில், தற்போது திறக்கப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்கள் அனைத்தும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டவை. எனவே, தேர்தலை மையமாக வைத்துக் கொண்டு அபிவிருத்திகள் நடைபெறுகின்றதென்பது ஏற்க முடியாத கருத்தாகும்.
கடந்த கால ஜனாதிபதித் தேர்தல்களில் தமிழர்கள் தமது விரல்களைச் சுட்டுக் கொன்றதை மறக்கமாட்டார்கள் என நினைக்கின்றேன்.
தமிழ் மக்கள்
எனவே, அந்த நேரத்தில் தமிழர்களை வாக்களிக்க விட்டிருந்தால் நிச்சயமாக தமிழர்களின் தலைவிதி மாறியிருக்கும். தற்போது எங்களுக்கு நாங்களே சூனியம் செய்து கொண்டு நாம் சகலதையும் இழந்து கொண்டிருக்கின்றோம்.
அதேபோன்றதொரு நிலையை தமிழர்கள் மீண்டும் ஏற்படுத்தி விடக் கூடாது என நான் கருதுகின்றேன். ஏனெனில், நடைபெற்ற ஜனாதிபதித் தெரிவிலே தமிழ் தரப்பு எதிர்ப்பினை வெளிக்காட்டியிருந்து.
இந்நிலையில், அந்த எதிர்ப்பின் வெளிப்பாடுகளை நாங்கள் தற்போது மறைமுகமாக அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். தற்போதைய ஜனாதிபதியை தமிழ்தேசியக் கூட்டமைப்பு ஆதரித்திருந்தால் மாவட்ட அபிவிருத்திக்குழு மற்றும் வடக்கு - கிழக்கு மாகாணசபை அனைத்தும் சரியான முறையிலே ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும்.
ரணிலுக்கு ஆதரவு
அதுமாத்திரமன்றி, ஊழல், திருட்டுக்கள் மற்றும் சர்வாதிகாரங்கள் நிறைந்திருக்காது என்பது எனது கருத்தாகும். எனவே, தமிழ் தரப்பு இதுபோன்ற தவறுகளை இனிமேலும் செய்யக்கூடாது.
மேலும், சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தி ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை (Ranili Wickremesinghe) மீண்டும் ஆதரிக்க வேண்டும் என்பதுதான் எனது கோரிக்கையாகும்.
அதேவேளை, எனக்கும் ஜனாதிபதிக்கும் இடையே உள்ள பரீட்சையமான உறவை வைத்துக் கொண்டு ரணில் 2024 செயலணியின் தலைமைப் பெறுப்பு எனக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆகையால், அந்த வாய்ப்பைப்
பயன்படுத்தி எம்மால் முடிந்த அபிவிருத்திகளை அதிகளவு செய்து கொண்டிருக்கின்றோம்” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan

சின்ன மருமகள் சீரியலில் முக்கிய நபர் மரணம்.. கதறி அழும் தமிழ் செல்வி! அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri
