ரணில் நாட்டை இன்னும் 12 ஆண்டுகள் ஆட்சி செய்ய வேண்டும் : வஜிர அபயவர்தன
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் 12 ஆண்டுகளுக்கு நாட்டை ஆட்சி செய்ய வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபயவர்தன தெரிவித்துள்ளார்.
காலியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்னும் 12 ஆண்டுகளுக்கு ரணில் ஆட்சி செய்யாவிட்டால் நாட்டின் நிலைமை மோசமாகும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாரிய நெருக்கடி
எவரேனும் இந்த நிலைமை மாற்றியமைத்தால் நாடு இருந்த நிலைமையை விடவும் மோசமான நிலைக்கு தள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தவிர்ந்த ஏனையவர்களினால் நாட்டை ஆட்சி செய்ய முடியாது எனவும் அவ்வாறு ஆட்சி செய்தால் நாடு பாரிய நெருக்கடியை எதிர்நோக்கும் எனவும் வஜிர அபவர்தன அண்மைக் காலமாக கருத்து வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |