உலக வரலாற்றில் சாதனை படைத்த ரணில்: ராஜித பெருமிதம்
ஒன்றரை வருடத்தில் உலகில் எந்த நாடும் வங்குரோத்து நிலையிலிருந்து மீளவில்லை என்றும், உலக வரலாற்றில் அந்த சாதனையை படைத்த ஒரேயொரு தலைவராக ரணில் விக்ரமசிங்க கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இயலும் ஸ்ரீலங்கா பேரணியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“உலக வரலாற்றில் எந்த ஒரு நாடும் ஒன்றரை வருடத்தில் திவால் நிலையில் இருந்து வெளியே வரவில்லை.
சாதனை புத்தகத்தில் ரணில்
அதனால்தான் ஒன்றரை வருட உலக வரலாற்றில் திவாலான நாட்டை மீட்ட தலைவர் என்று சாதனை புத்தகத்தில் ரணில் விக்ரமசிங்க எழுதப்பட்டுள்ளார்.
இது பொருளாதாரத்தின் அதிசயம். உலகத் தலைவர்கள் இந்த பொருளாதாரத்தை அப்படித்தான் பார்க்கிறார்கள்.
இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முன்பு, எத்தியோப்பியா திவாலானது. ஐஎம்எப் என்ன சொன்னது?
அது இயலும் ஸ்ரீலங்கா என்று அழைக்கப்பட்டது. தற்போது ஸ்ரீலங்கா விக்ரமசிங்க என்று அழைக்கப்படடுகிறது” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |