திருமண நிகழ்வில் ஒன்றிணைந்த அரசியல் முக்கிய புள்ளிகள்! தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம்
முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று இரவு நடைபெற்றுள்ள நிலையில், அது அடுத்தக்கட்ட அரசியல் செயற்பாட்டுக்கான ஆரம்பம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக முறுகல் நிலையில் உள்ள ரணில் - சஜித் ஆகியோரின் சுமுகமான கலந்துரையாடலின் போது, பல சாதகமான நிலைப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பிலியந்தலையில் உள்ள ஒரு ஹோட்டலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரியவின் மகனின் திருமண நிகழ்வு நேற்றிரவு இடம்பெற்றது..
ரணில் - சஜித் சந்திப்பு
இதன்போது முன்னாள் ஜனாதிபதிக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் திருமண நிகழ்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருமண நிகழ்வுக்கு சென்ற சஜித், ரணில் விக்ரமசிங்க அமர்ந்திருந்த மேசைக்கு செல்வதற்கு முன்னர் மனுஷ நாணயக்கார மற்றும் சாகல ரத்நாயக்க உள்ளிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் குழு அமர்ந்திருந்த மேசைக்கு சென்றுள்ளார்.
இதைக் கண்ட ரணில் விக்ரமசிங்க தனது இருக்கையில் இருந்து எழுந்து சஜித் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் அமர்ந்திருந்த மேசைக்கு சென்றுள்ளார்.
உங்கள் நண்பர்களுடன் பேசிவிட்டு அந்த மேசைக்கு வாருங்கள் என ரணில் சஜித்தை அணுகி நகைச்சுவையாக, அடுத்தக்கட்ட அரசியலை ஆரம்பித்துள்ளார்.
சஜித்திற்கு வரவேற்பு கொடுத்த ரணில் தரப்பு
இந்நிலையில் சக நண்பர்களின் ஆலோசனைக்கு அமைய, ரணிலிடம் சென்ற சஜித்த கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, மனோ கணேசன், திகாம்பரம், சாமர சம்பத் உள்ளிட்டவர்கள் அமர்ந்த மேசையில் இருந்தனர்.
சஜித்திற்கு வரவேற்பு கொடுத்த ரணில் தரப்பு, ஆசனம் ஒன்றை வழங்கி ரணிலுடன் கலந்துரையாடலுக்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தனர்.
இதன்போது ரணிலும் சஜித்தும் சுமார் ஒரு மணி நேரம் விவாதித்துக் கொண்டிருந்தனர். அதே நேரத்தில் குழுவின் மற்ற உறுப்பினர்களும் தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து சில பிரச்சினைகளை எழுப்பி விவாதத்தில் இணைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
சமகால அரசாங்கத்திற்கு எதிராக பலமான எதிர்க்கட்சி கூட்டணி ஒன்றை அமைக்கும் முனைப்புகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.
இவ்வாறான நிலையில், ரணில் - சஜித் தரப்பின் சுமுகமான சந்திப்பு தென்னிலங்கை அரசியல் மட்டத்தில் அதிகம் பேசப்படும் விடயமாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


முத்து மீது தவறு இல்லை என தெரிந்ததும் ரவி செய்த செயல், நீது அடித்தது யார் தெரியுமா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்ட இளம்பெண்: விவரங்கள் வெளியாகின News Lankasri