ரணிலின் கடைசி நிமிட மோசடி தந்திரத்துக்கு வாய்ப்பில்லை: அனுரவின் நம்பிக்கை
ஜனாதிபதி தேர்தலில், சிலர் அஞ்சுவது போல் கடைசி நிமிட தேர்தல் மோசடிகளுக்கு வாய்ப்பில்லை என்று தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தல் தொடர்பான கடமைகளை மேற்கொள்ளும் பெரும்பாலான அரச ஊழியர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள் மற்றும் தேர்தல் திணைக்கள அதிகாரிகள் தேசிய மக்கள் சக்தியினருக்கு ஆதரவளிக்கின்றனர்.
எனவே, கடைசி நிமிட மோசடிகள் இடம்பெறாது என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஒன்றும் செய்ய முடியாது
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒரு தந்திரமானவர் என்றும், தேசிய மக்கள் சக்தியின் வெற்றியைத் தடுப்பதற்காக கடைசி நிமிடத்தில் எத்தகைய முயற்சியையும் மேற்கொள்வார் என்றும் சிலர் அஞ்சுகின்றனர்.
எனினும், தேசிய மக்கள் சக்தியின் வெற்றியைத் தடுக்க விக்ரமசிங்கவால் எதுவும் செய்ய முடியவில்லை. எனவே ரணில் தோல்வியை ஏற்றுக்கொண்டு அமைதியாக வெளியேறுவார் என்பதில் நான் உறுதியாக உள்ளேன் என அனுரகுமார தெரிவித்துள்ளார்.
அவர் தேர்தலில் தோல்வியடைந்த அனுபவம் வாய்ந்தவர் என்பதால், வாக்குச் சீட்டில் ஏதாவது செய்துவிடலாம் அல்லது வாக்குப்பெட்டியை மாற்றலாம் என்று சிலர் பயப்படுகிறார்கள்.
எனினும், ஒன்றும் செய்ய முடியாது என்றும் அனுரகுமார குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டின் விலை மதிப்பு எவ்வளவு தெரியுமா? இவ்வளவு கோடியா! Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri
