முற்றாக நீக்கப்பட்ட ரணிலின் பாதுகாப்பு! பொலிஸ் ஊடகப்பிரிவு மறுப்பு
புதிய இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவல்கள் பொய்யானவை என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதிக்கு பாதுகாப்பாக தற்போது 50 விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர்கள், 6 ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் மற்றும் 163 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு கடைமைகளில் ஈடுபட்டுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக தகவலொன்று வெளியாகியுள்ளது.

ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்கப்பட்டிருந்த பிரதான பாதுகாப்பு அதிகாரியுடன் குறித்த நீக்கம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதியின் பாதுகாப்பு
இதன்படி முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட அனைத்து அதிகாரிகளும் நடைமுறைக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட 307 பொலிஸ் உத்தியோகத்தர்களும், 24 தற்காலிக உத்தியோகத்தர்களும் நாடளாவிய ரீதியில் பல்வேறு பொலிஸ் நிலையங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது..
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri