எல்போட் நாடாளுமன்றத்தில் உறுப்பினராகும் எண்ணம் இல்லை! ரணில்
ஃபெராரி உரிமம் உள்ள ஒருவர், "எல்போட்" உள்ளவர்களுடன் நேரத்தை செலவிடுவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் உள்ள புதிய ஜனநாயக முன்னணி அலுவலகத்தில் நடைபெற்ற இளம் வழக்கறிஞர்கள் கூட்டத்தைத் தொடர்ந்து, ரணில் மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் திரும்ப உள்ளதாக ஊடக அறிக்கைகளை மேற்கோள் காட்டி, பத்திரிகையாளர்கள் ரணில் விக்ரமசிங்கவிடம் இந்தக் கேள்வியைக் கேட்டனர்.
எல்போட் நாடாளுமன்றம்
அதற்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“எல்போட்” நாடாளுமன்றத்தில் உறுப்பினராகும் எண்ணம் தனக்கு இல்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவிற்கும் தெரிவித்ததாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியபோது தான் ஏற்றுக்கொண்ட சவாலின் வெற்றியால் தான் பணிவுடன் இருக்கின்றேன்.
மக்கள் நாட்டின் பொறுப்பை ஒரு புதிய குழுவிடம் ஒப்படைத்துள்ளதால், ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை அந்த அணி முறையாக நிறைவேற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

எப்படி அரேஞ்ச் மேரேஜ்க்கு ஒத்துக்கிட்டீங்க.. மனம் திறந்து பேசிய நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் Cineulagam

ரூ.23 லட்சம் சம்பளம் வாங்கும் வேலையை விட்டுவிட்டு.., UPSC தேர்வில் வெற்றி பெற்ற பெண் ஐஏஎஸ் அதிகாரி News Lankasri
