ரணிலின் கைதின் எதிரொலி : அவசரமாகக் கூடிய எதிர்க்கட்சிகள்
எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மற்றும் கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் கொழும்பில் தற்போது ஒரு சிறப்புக் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
கொழும்பு மலர் வீதியில் அமைந்துள்ள அரசியல் கட்சி அலுவலகத்தில் இன்று (23) நண்பகல் 12 மணியளவில் கூட்டம் நடைபெற்றுள்ளது.
ரணில் விக்ரமசிங்கவின் நிலைமை
ஐக்கிய தேசியக் கட்சி (UNP), ஐக்கிய மக்கள் சக்தி(SJB), ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP), ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP), மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) ஆகியவற்றின் அரசியல் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், பல நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இந்தக் கலந்துரையாடலில் இணைந்துள்ளனர்.
தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நிலைமை மற்றும் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதே இந்த சந்திப்பின் முதன்மை நோக்கமாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் இந்த கலந்துரையாடலில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 3 நாட்கள் முன்

காலை வெறும் வயிற்றில் இதில் ஏதாவது ஒன்றை கட்டாயம் எடுத்துக்கோங்க... உடம்பில் அதிசயத்தை உணரலாம் Manithan
