தேர்தலுக்கு முன் கூட்டமைப்பிடம் உறுதியளித்த ரணில்! வெளிவரும் பின்னணி (VIDEO)
நாடாளுமன்றில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்னர் அவர் எந்தக்கட்சியையும் அழைத்து தனக்கு ஆதரவு தருமாறு கேட்கவே இல்லை என ரெலோவின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனாதிபதி தெரிவின் போது இரவோடு இரவாக பேரம் பேசப்பட்டு பல பெட்டிகள் கை மாறியுள்ளதாக வெளியாகிய செய்திகள் முற்றுமுழுதாக உண்மைக்கு புறம்பானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
உன்னதமான விடுதலை போராட்ட போராளிகளை பற்றியே வதந்திகளை பரப்பும் சிலர் மத்தியில் இவ்வாறு பொய்யான தகவல்களை பரப்புவது பெரிய விடயமல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ள விடயங்கள் காணாலி வடிவில் வருமாறு,
எனினும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ரணில் விக்ரமசிங்கவிடம் 10 அம்ச கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை கொடுத்தபோது கூட அவர் அதனை வாங்கி பார்த்து விட்டு இவற்றை செய்யலாம் தானே என கூறிவிட்டு சென்று விட்டார்.
ஆனால் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சுமார் இரண்டரை மணிநேரம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவே கலந்துரையாடினார்.அப்படியென்றால் அவருடன் அல்லவா பேரம் நடந்திருக்க வேண்டும். அவருடன் அல்லவா பெட்டிகள் மாறியிருக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
வெற்றிமாறனை தொடர்ந்து பிளாக்பஸ்டர் இயக்குநருடன் இணையும் சிம்பு? வெளிவந்த வேற லெவல் அப்டேட் Cineulagam
900 கடந்த இறப்பு எண்ணிக்கை... இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள் News Lankasri
பறப்பதற்கு பாதுகாப்பற்ற 6,000 விமானங்கள்... ஸ்தம்பிக்கும் பிரித்தானிய விமான நிலையங்கள் News Lankasri